கொழும்பு பங்கு பரிவர்த்தனை தற்காலிகமாக மூடப்பட்டமை சர்வதேசத்திற்கு மோசமான சமிக்ஞை

சர்வதேச திறந்த பொருளாதாரத்திற்கு தூணாக விளங்கும் கொழும்பு பரிவர்த்தனை நடவடிக்கைகள் ஒரு வார காலத்திற்கு அதாவது இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.

இது சர்வதேசத்திற்கு மோசமான சமிக்ஞையாக அமைந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மறுபுறம் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது போன்றோர் தோற்றப்பாட்டை காட்டுவதாகவும் சர்வதேச பார்வையில் இது பாரியதொரு தாக்கத்தை செலுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் மூலம் வர்த்தகத்திற்கு பாரிய நெருக்கடி நிலைமை தோன்றியிருப்பதை சர்வதேசத்திற்கு புலப்படுத்துவதாக உள்ளது என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் செயற்பாடுகள் ஒரு வார காலத்திற்கு 18 ஆம் தொடக்கம் 22 ஆம் திகதி வரை மூடப்படும் என பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இந்த முடிவு நாட்டின் அரசியல் ஸ்திரமற்ற தன்மை மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலைமையை காரணமாக மே எடுக்கப்பட்டதாகவும் குறித்த அவ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும் பங்கு பரிவர்த்தனையில் ஈடுபடும் முகவர்கள் பலர் தமது அதிருப்திகளை வெளியிட்டு இருக்கிறார்கள். இது தொடர்பில் தங்களுடன் எதுவித கலந்தாலோசனைகள் இன்றி இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இத்தீர்மானம் உலகின் வர்த்தக போக்குகளுக்கு எதிராக செயற்படுவதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்னர்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்