எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையினால் நகர்புற மத்திய தர வர்க்கத்தின் சிலர் கிராமப்புறங்களுக்கு பிரவேசித்து நெல் சேகரிப்பில் ஈடுபடுவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
அநுராதபுர மாவட்ட சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
எதிர்காலத்தில் ஒரு கிலோகிராம் அரிசி 500 ரூபாவாக அதிகரிக்கக்கூடும் என அதன் தலைவர் யூ.கே சேமசிங்க அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்தார்.
இதேவேளை, இந்த வருடத்திற்குள் 8 இலட்சம் மெற்றிக் டன் அளவிலான அரிசிக்கு தட்டுப்பாடு நிலவும் என விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.ஆர் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com





