கல்கிஸையிலிருந்து காங்கேசன்துறைக்கு புதிய நகர்சேர் கடுகதி தொடருந்து சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண தொடருந்து நிலைய பிரதம அதிபர் தி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண தொடருந்து நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளைய தினத்திலிருந்து பிரதி வெள்ளிக்கிழமைகளில் கல்கிஸையில் இருந்து காங்கேசன்துறைக்கு இந்த இரவுநேர நகர்சேர் கடுகதி தொடருந்து, சேவையில் ஈடுபடவுள்ளது
வெள்ளிக்கிழமைகளில் கல்கிஸையில் இரவு 10 மணிக்கு புறப்படும் குறித்த தொடருந்து, அடுத்தநாள் அதிகாலை 5.25க்கு யாழ்ப்பாணத்தை சென்றடைந்து 5.30க்கு புறப்பட்டு காங்கேசந்துறையை சென்றடையும்.
பின்னர் அந்த தொடருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் காங்கேசன்துறையில் இருந்து இரவு 10 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்பட்டு தெஹிவளையை சென்றடையும்.
குறித்த தொடருந்திற்கான ஆசனப் முன்பதிவுகளை, யாழ்ப்பாண தொடருந்து நிலையத்திலும், ஏனைய ஆசன முன்பதிவுகள் செய்யக்கூடிய தொடருந்து நிலையங்களிலும் செய்யமுடியும் என யாழ்ப்பாண தொடருந்து நிலைய பிரதம அதிபர் தி.பிரதீபன் குறிப்பிட்டார்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





