கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கான டிஜிட்டல் நுழைவாயில்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நடைமேடை ஒன்றில் இருந்து புறப்படும் பயணிகளுக்கான டிஜிட்டல் நுழைவாயில்/அணுகல் முறை தொடர்பான முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனம் விமான நிலையத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் பல பல நீட்டிப்புகளை செய்ய திட்டமிட்டுள்ளது.

அதன்படி, நடைமேடை ஒன்றின் குறுக்கே புறப்படும் பயணிகளுக்கு டிஜிட்டல் கேட்வே/அணுகல் முறைி அறிமுகம் செய்வதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த முன்னோடித் திட்டம் சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகத்தின் ‘ஒரு அடையாளம்’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.

அதன்மூலம், ஓய்வறை இடத்தில் மின்னணு கதவுகள் மூலம் முகத்தை அடையாளம் காணும் இயந்திரங்களை நிறுவுவதால், பயணிகளை அடையாளம் காண செல்லுபடியாகும் டிஜிட்டல் கடவுச்சீட்டு வைத்திருப்பதை உறுதிசெய்வதன் மூலம், பயணிகளை பரிசோதிக்கும் முறை எளிதான செயலாக இருக்கும்.

சுற்றுலாத்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இது தொடர்பான முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்