அளுத்கம கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் மனைவி பேருவளை கலாவில கந்தேனிவாச என்ற இடத்தில் சட்டவிரோதமான முறையில் பெற்றோலை அதிக விலைக்கு விற்பனை செய்யும் போது பெற்றோல் கையிருப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருவளை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்திய விசாரணையில், கணவர் பணி முடிந்து வீடு திரும்பும் போது கொண்டு வரும் பெற்றோலை தான் விற்பனை செய்வதாகக் கூறியுள்ளார்.
பெற்றோல் போத்தல் ஒன்றை 800 ரூபாவுக்கு கொள்வனவு செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வீட்டை சோதனை செய்து பெண்ணை கைது செய்ததுடன் பெற்றோல் கையிருப்பையும் பறிமுதல் செய்ததாக பேருவளை பொலிஸ் பொறுப்பதிகாரி லலித் பத்ம குமார தெரிவித்தார்.
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்“ 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





