புதிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரொன் காரணமாக உலக பொருளாதாரம் வீழ்ச்சியடையக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த வருடத்தின் 5.9 ஆக காணப்பட்ட உலக பொருளாதாரமானது அடுத்த வருடத்தில் 4.9 ஆக வீழ்ச்சியடையும் என அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட உலகின் வலுவான பொருளாதார பின்னணி கொண்ட இராச்சியங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு அமைய இந்த நிலைமை தீர்மானிக்கப்படும்.
இதுவரை இலங்கை உள்ளிட்ட 40க்கும் அதிக நாடுகளில் ஒமிக்ரொன் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாரணி சூப்பர்மார்கெட் யாழில் 24 மணிசேவையை வழங்கி வருகிறது.!! tharanysupermarket.com
Post Views: 34