எரிவாயு விநியோகத்தின் போது 100 எரிவாயு சிலிண்டர்கள் மாயம்

கொழும்பில் ஆமர் வீதியில் எரிவாயு விநியோகத்தின் போது 100 எரிவாயு சிலிண்டர்கள் காணாமல் போயுள்ளதாக ஆமர் வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் ஆமர் வீதியில் இன்று பகல் எரிவாயு விநியோகம் இடம்பெற்றது.

இதன்போது அங்கு எரிவாயு சிலிண்டர்களை வாங்குவதற்கு வரிசையில் காத்திருந்த மக்கள் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொண்டிருந்த நிலையில், எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிவந்த பாரவூர்தி மீது தாக்குதல் மேற்கொண்டதில் சுமார் 100 எரிவாயு சிலிண்டர்கள் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த காணாமல் போன எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் அடுத்தகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆமர் வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்