பெற்றோல் 35 ரூபாவாலும், டீசல் 24 ரூபாவாலும் விலை உயர்வா?

எரிபொருள் விலையை விரைவில் அதிகரிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நிதியமைச்சரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை முகம் கொடுத்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு டொலரை பயன்படுத்தினால், அந்நிய செலாவணி இல்லாமல் பெரும் நெருக்கடியை நாடு சந்திக்க நேரிடும் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பெற்றோல் 35 ரூபாவாலும், டீசல் 24 ரூபாவாலும், மண்ணெண்ணெய் 11 ரூபாவாலும் உடனடியாக அதிகரிக்கப்பட்டு எரிபொருள் தேவையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com

சிறப்புச் செய்திகள்