ஜெட் ஏ–1 விமானங்களுக்கான எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிப்பதை உறுதிப்படுத்துவதற்காக புதிய விநியோகஸ்தர்களை அடையாளம் காண்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் விமான சேவைகளின் தொழிற்பாடுகளுக்காக நாளாந்தம் 1.2 மில்லியன் லீற்றர் எரிபொருள் தேவைப்படுகிறது.
நாட்டில் தற்போதைய நிலைமையின் கீழ் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானக் நிறுவனங்களின் தொழிற்பாடுகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்குத் தேவையான குறைந்தபட்ச எரிபொருள் அளவைக் கூட விநியோகிப்பதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமையின் கீழ் விமான சேவை தொழிற்பாடுகள் முடக்கப்படாமல் தொடர்ந்து மேற்கொண்டு செல்வதற்கு இயலுமை கிட்டும் வகையில் இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் களஞ்சியக்காரர்களுக்கு ஜெட் ஏ-1 விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தலுக்கு அனுமதி வழங்குவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
புலம்பெயர் வாழ் மக்களே தாயகத்தில் வசிக்கும் உங்கள் உறவினர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், அன்பளிப்புகள் கொடுத்திட இலகு வழி. hi2world.com
🛒 இலங்கையில் ஆன்லைன் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய சிறந்த இணையதளம் lankaface.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





