2018 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 11 உர நிறுவனங்களுக்குத் தேசிய உரச் செயலகத்தின் ஊடாக 150 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்ற சம்பவம் தொடர்பில் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கமத்தொழில் அமைச்சின் ஊடாக இந்த விசாரணைகள் இடம்பெறுவதாகத் தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன ஹெவகே எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் உர நிவாரணத்தை வழங்குவதற்காக நாட்டுக்குக் குறைந்த விலையில் உரத்தைக் கொண்டு வருவதற்காக 11 உர நிறுவனங்களுக்கு 150 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை செலுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களம் வெளிப்படுத்தியிருந்தது.
குறித்த உர நிறுவனங்கள் 2020ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டிலும் 213 தடவைகள் உரத்தை இறக்குமதி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்போது அதிக விலைக்கு ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 272 மெற்றிக் டன் உரம் கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த உர தொகைக்கான சந்தை பெறுமதிக்கு அமையக் குறைக்கப்பட்ட தொகையைச் செலுத்துவதற்குத் தேசிய உர செயலகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
உரத்தை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் அதிக விலையை உர செயலகம், நேரடியாகச் செலுத்தியுள்ளதாகவும் கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!
நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!
1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱
நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு
⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!
🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com
Shop Now: tharanysupermarket.com
1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱