இலங்கையிலிருந்து வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற இருவர் கைது

11 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை டுபாய்க்கு கடத்த முயன்ற இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி சந்தேக நபர்கள் டுபாய் நோக்கி பயணிப்பதற்காக இன்று (02) அதிகாலை 2.55 மணியளவில் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அவர்களின் பயணப் பொதிகளை பரிசோதித்த சுங்க அதிகாரிகள், 46,000 யூரோ பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கைப்பற்றியதாக சுங்கப் பேச்சாளரும், பிரதி சுங்கப் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்