இலங்கையின் ஏற்றுமதி நடவடிக்கைகளை ஊக்குவிக்க ஜேர்மன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைப்பு முன்வந்துள்ளது.
இலங்கையின் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான இறக்குமதியாளர்களை தெரிவு செய்வதற்கு இந்த அமைப்பு முன்வந்துள்ளது.
இந்த அமைப்பின் சர்வதேச கண்காட்சி ஒன்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ம் திகதி முதல் 7ம் திகதி வரை பேர்லினில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பழ வகைகள், மரக்கறிகள் என்பனவற்றை ஏற்றுமதி செய்யும் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு இந்த கண்காட்சி மூலம் நன்மை கிடைக்கப்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும், பழ வகைகளுக்கு சிறந்த கேள்வி நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் இலங்கையில் இருந்து ஜேர்மனிக்கு 2.15 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மரக்கறி வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com