இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 364 ரூபா 98 சதமாக பதிவாகியுள்ளது.
டொலரின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 01 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்று மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களுக்கமைய, டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 377 ரூபா 49 சதமாக காணப்பட்டது.
இந்த நிலையில், இன்று ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது.
உரிமம் பெற்ற பல வணிக வங்கிகளில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்று 365 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன.
உரிமம் பெற்ற வணிக வங்களில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி நேற்றைய தினம் 380 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 435 ரூபா 25 சதம். விற்பனை பெறுமதி 446 ரூபா 2 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 369 ரூபா 61 சதம் விற்பனை பெறுமதி 380 ரூபா 23 சதம்
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 352 ரூபா 29 சதம். விற்பனை பெறுமதி 365 ரூபா 79 சதம்
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 271 ரூபா 17 சதம் விற்பனை பெறுமதி 282 ரூபா 24 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 241 ரூபா 90 சதம் விற்பனை பெறுமதி 253 ரூபா 12 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 73 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 84 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 4 ரூபா 64 சதம்
பஹ்ரேன் தினார் 954 ரூபா 81 சதம், ஜோர்தான் தினார் 507 ரூபா 75 சதம், குவைட் தினார் 1173 ரூபா 2 சதம், கட்டார் ரியால் 98 ரூபா, 52 சதம,; சவுதி அரேபிய ரியால் 95 ரூபா 97 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 98 ரூபா 1 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com