நவராத்திரியின் ஐந்தாம் நாள் என்பது நவராத்திரி பண்டிகையின் மையப் பகுதியாக கருதப்படுகிறது. இது மகாலட்சுமியை வழிபடக் கூடிய இரண்டாவது நாளாகும்.
இது பஞ்சமி திதியில் வருவதால் வாராஹி அம்பிகையை வழிபடுவதற்கும் ஏற்ற நாளாகும்.
அதனால் இது இரட்டிப்புப் பலன் தரும் நாளாகவும் கருதப்படுகிறது. இந்த நாளில் மகாலட்சுமியை எப்படி வழிபட வேண்டும், என்ன மலர் படைத்து, எந்த நைவேத்தியம் படைத்து, என்ன மந்திரம் சொல்லி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நவராத்திரி 5ம் நாள் வழிபாடு
அம்பிகையின் பெயர் – மோகினி (வைஷ்ணவி)
கோலம் – பறவை வகை கோலம்
மலர் – மனோரஞ்சிதம் அல்லது பாரிஜாதம்
இலை – திருநீற்றுப் பச்சை இலை
நைவேத்தியம் – தயிர் சாதம்
சுண்டல் – பூம்பருப்பு சுண்டல் (கடலை பருப்பு)
பழம் – மாதுளை பழம்
Post Views: 157