சிலரை மட்டும் ஏன் கொசுக்கள் துரத்தி துரத்தி கடிக்கிறது

வெயிலிலும், மழையிலும் கொசுக்கள் இன்று படையெடுத்து மனிதர்களைத் தாக்குகின்றது.

மனித இரத்தத்தில் இருக்கும் குறிப்பிட்ட வகையான புரோட்டீன்கள் மூலம் கொசுக்கள் முட்டைகளை உற்பத்தி செய்கின்றன.

கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் போது, கொசுவின் எச்சில் மனித இரத்தத்தில் உட்செலுத்தப்படுகிறது.

இப்படி உட்செலுத்துவதனால் தான் கொசுக்கள் மூலம், மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜிக்கா வைரஸ் போன்ற நோய்த்தொற்றுக்கள் ஏற்படுகின்றன. கொசுக்கள் ஒரு சிலரை மட்டும் அதிகம் கடிக்கின்றது.

இனி கொசுக்கள் கடிக்க எதுவெல்லாம் காரணமாக இருக்கக்கூடும் என்பதைக் காண்போம்.

உடைகள்
வெளிர் நிற ஆடைகளை அணிந்திருப்பவர்களை விட அடர் நிற ஆடைகளை அணிந்திருப்பவர்களையே கொசுக்கள் அதிகம் கடிக்கும். அதோடு, கை, கால்கள் நன்கு தெரியும்படியான ஆடைகளை அணியும் போது, கொசுக்கள் இன்னும் அதிகமாக கடிக்கும்.

இரத்த வகை
மற்ற இரத்த பிரிவினருடன் ஒப்பிடுகையில் ‘O’ வகை இரத்த பிரிவினரை கொசுக்கள் அதிகமாக கடிக்கும். ஏனெனில் இந்த வகையில் இரத்த பிரிவினரின் தோலில் கொசுக்களை ஈர்க்கும் கெமிக்கல்கள் அதிகம் வெளியிடப்படுவதாக ஆய்வில் கூறப்படுகிறது.

உடல் வெப்பம்
பெண் கொசுக்களில் உள்ள ஆண்டெனாக்கள் வெப்ப உணர்திறனைக் கொண்டவை. இந்த பெண் கொசுக்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், 1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைவான வெப்பநிலையை எளிதில் கண்டறிய முடியும். எனவே சூடான உடல் வெப்பநிலையைக் கொண்டவர்களை கொசுக்களை அதிகம் கடிக்கும் வாய்ப்புள்ளது.

அதோடு உடல் பருமன் உள்ளவர்கள் அல்லது அதிக மெட்டபாலிசத்தைக் கொண்டவர்களை பெண் கொசுக்கள் அதிகம் கடிக்கும்.

வியர்வை நாற்றம்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வியர்வையை உற்பத்தி செய்கிறார்கள்.

இந்த வியர்வை ஒருவரின் சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களுடன் இணைந்து நாற்றத்தை உற்பத்தி செய்கிறது. இந்த நாற்றம் தான் கொசுக்களை ஈர்க்கும் வாய்ப்புக்களை அதிகரிக்கின்றன.

சிறப்புச் செய்திகள்