கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழிநுட்ப கல்லூரி வடக்கு மாகாண நிலையத்தில் தொழிற்பயிற்சி பெறுகின்ற மாணவர்களில் 95 வீதமானவர்கள் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது மிகவும் கவலைக்குரியது.
வடக்கு மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களை சேர்ந்த மாணவர்களே 95 வீதமானவர்கள் இங்கு தொழிற்பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் தொழிற்பயிற்சியின் பின்னர் பல்வேறு நிறுவனங்களில் தொழில் வாய்ப்பினை பெற்று சென்றுவிடுகின்றனர். பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பினையும் பெற்றுள்ளனர்.
ஆனால் வடக்கு இளம் சமூகம் இங்கு கற்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இவ்வாறான இரண்டு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் உண்டு ஒன்று மொரட்டுவ மற்றையது கிளிநொச்சி.
எங்கள் மத்தியில் உள்ள இளம் சமூகத்தின் பெரும்பாலானவர்கள் சட்டவிரோத செயற்பாடுகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பொறுமையாக இரண்டு மூன்று வருடங்கள் தெழிற்பயிற்சியினை பெற்று பின்னர் தொழில் ஒன்றை பெற்று உழைப்பதனை விட ஓவர் நைட்டில் ஒபாமா ஆக வேண்டும் என்ற வகையில் தினமும் கையில் நிறைய பணம் இருக்க வேண்டும் என்ற மனநிலையில் அதிகமானவர்கள் காணப்படுகின்றனர்.
இதன் காரணமாகவே அவர்கள் சட்டவிரோத செயற்பாடுகள் மூலம் வருமானம் உழைக்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்த உளவியல் மாற்றம் பெறாத வகையில் அறிவியல் நகரில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிலையம் போன்று பல உருவாக்கப்பட்டாலும் பயனில்லையே!
Sri Lanka, German, Technical College, Kilinochchi, Science City