இந்தியாவின் நம்பகமான நண்பர் மற்றும் நேர்மையான பங்காளி நாடு என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.
கம்போடியாவில் இடம்பெற்று வரும் ஆசியான் மற்றும் இந்திய அமைச்சர் மட்ட மாநாட்டில் பங்கேற்ற சென்றுள்ள நிலையில் இன்று இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் அலி சாப்ரியை சந்தித்தபோதே ஜெய்சங்கர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
சீனாவின் விஞ்ஞான கப்பல் இலங்கைக்கு வரும் நிலையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் முறுகல்களை தவிர்க்கும் ராஜதந்திர பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சரின் கருத்து வெளியாகியுள்ளது.
முன்னதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சாப்ரி, அமெரிக்க ராஜாங்க செயலாளர் என்டனி பிளிங்கனையும் சந்தித்தார்.
இதன்போது இலங்கை நெருக்கடியை சந்தித்துள்ள போதும், ஜனநாயக ரீதியில் அனைத்து தரப்பினைரையும் இணைத்து அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





