கீர்த்தி கல்யாணத்தில் பட்டு வேட்டியுடன் விஜய்

நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவை பூர்வீகமாக கொண்ட துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

15 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதுதொடர்பாக, கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், வருங்கால கணவர் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில், “எங்களது 15 வருட காதல் இன்னும் தொடர்கிறது” என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், கோவாவில் கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் திருமணம் இருவீட்டார் முன்னிலையில் எளிமையான முறையில் நடைபெற்றது.

கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று வாழ்த்தினர். இதனையடுத்து திருமண புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் அவ்வபோது வெளியிட்டு வருகிறார்.

இதில், கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு நடிகர் விஜய் நேரில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார். விஜய் பட்டு வேட்டி சட்டையில் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் திருமணத்தில் விஜய் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களுகடன், ” எங்களின் கனவு நபர் எங்களின் கனவு திருமணத்தில் வாழ்த்தியபோது.. அன்புடன் உங்கள் நண்பி மற்றும் நண்பா” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறப்புச் செய்திகள்