யாழ்ப்பாணத்தில் vவாய் பேச முடியாத பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், நீதிமன்றின் அதிரடி உத்தரவு!

யாழில் பெண்ணொருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று (14) பிறப்பித்துள்ளது.

இதனடிப்படையில், சந்தேக நபரை 14 நாள்கள் விளக்கமறியலில் விளக்கமறியிலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வாய்பேச முடியாத பெண்ணே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 27 ஆம் திகதியன்று நள்ளிரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, பெண்ணின் உறவினரால் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினர் நடவடிக்கைக்குள் சிக்காமல் குறித்த சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இது தொடர்பில் ஊர்காவற்றுறை காவல் நிலைய கொன்சபத்து அதிகாரியான ஹரிதாஸ் தலைமையிலான அணியினருக்கு இரகசிய தகவல் அனுப்பப்ட்டுள்ளது.

இதனடிப்படையில், எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையின் நேற்று (14) நள்ளிரவு குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்பின்பு, இன்று (15) ஊர்காவற்றுறை நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், குறித்த நபரை எதிர்வரும் 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்