இலங்கையில் வரலாறு காணாத பணவீக்கம்

ஜூலை மாதத்தில் பணவீக்கம் 60.8% ஆக உயர்ந்துள்ளது.

உணவு வகை பணவீக்கம் 90.9%ஆகவும் போக்குவரத்துக்கான பணவீக்கம் 143.6% ஆகவும் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பணவீக்கம் 75 வீதமாக உயரக்கூடும்!

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான 12 மாதங்களில் இலங்கையின் பணவீக்கம் 60.8 வீதமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு வருட பண அச்சிடும் நடவடிக்கையின் பின்னர் நாணயத்தின் வீழ்ச்சிக் காரணமாகவே இந்த பணவீக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை 12 மாதங்களில் உணவுக் குறியீடு 90.9 சதவீதமாக இருந்தது.

2015 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட நாணய நெருக்கடியின் வெளியீட்டு இடைவெளியை நிரப்புவதற்காக கடந்த இரண்டு வருடங்களாக இலங்கையின் மத்திய வங்கி பணத்தை அச்சிட்டுள்ளது.

இதன் காரணமாக அமெரிக்க டொலர் 200ல் இருந்து 360 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை பணவீக்கம் 75 சதவீதமாக உயரக்கூடும் என்று மத்திய வங்கி கூறியுள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்