இலங்கையில் சில தினங்கள் முன் தங்கத்தின் விலை வரலாறுகாணாத அளவு உயர்ந்து காணப்படுகிறது.
அதாவது யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (10) தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 189,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. (கடந்த தினத்தை விட 4000 ரூபா குறைந்து காணப்படுகின்றது)
22 கரட் தங்கம் 173,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. (கடந்த தினத்தை விட 4500 ரூபா குறைந்து காணப்படுகின்றது) (கொழும்பு செட்டியார் தெருவிலும் இந்த விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றது.) மற்றும் 18 கரட் தங்கம் 142,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலையும் சற்று ஏறி இறங்கிய நிலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் உயந்துள்ளது. இன்று குறைந்துள்ளது.
சீன, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கிக் குவிப்பது போன்றவற்றால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.