தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையான QR முறைமையின் அடிப்படையில் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருகின்றது.
சில எரிபொருள் நிலையங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், மேலும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம், சில எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கப்பெறாமை காரணமாக வாகனங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
வலுசக்தி அமைச்சின் ஊடாக 1, 140 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR முறை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் ஊடாக 10 இலட்சம் பேருக்கு இதுவரையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருளை பெற்றுக்கொள்ளும் போது இடம்பெறும் முறைக்கேடுகளை கட்டுப்படுத்துவதற்காக QR குறியீட்டு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





