நான் கைதாகவில்லை, நடந்தது இதுதான்.. பிக் பாஸ் தினேஷ் உண்மை விளக்கம்!

சீரியல் நடிகர் தினேஷ் தமிழ் சின்னத்திரையில் முக்கிய நடிகர்களில் ஒருவர். அவர் பிரபல நடிகை ரச்சிதாவை காதல் திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும்போது தான் ரச்சிதாவுடன் மீண்டும் சேர விருப்பப்படுவதாக தினேஷ் கூறினார். ஆனால் ரச்சிதா அதற்கு வாய்ப்பே இல்லை என கூறி விவாகரத்து வழக்கை தொடர்ந்து நடத்தினார்.

இந்நிலையில் நடிகர் தினேஷ் நெல்லையில் பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக 3 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வழக்கில் தினேஷ் நேற்று கைதாகிவிட்டதாக செய்தி பரவியது.

இந்நிலையில் தற்போது தினேஷ் தான் கைதாகவில்லை என வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்து இருக்கிறார்

தன் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருக்கிறது எனவும், போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக தான் அழைத்து சென்றார்கள் என கூறி இருக்கும் தினேஷ், “நான் தவறு செய்யவில்லை என ஆதாரத்துடன் விளக்கம் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்” என கூறி இருக்கிறார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்