செவ்வாய் கிரகத்தின் அம்சத்தால் அதிர்ஷ்டம் அடையும் ராசியினர்!

செவ்வாய் கிரகம் தைரியம், வீரம் மற்றும் துணிச்சலின் அடையாளமாக கருதப்படுகிறது. இவரை முடிவில்லாத சக்தியின் அம்சமாகவும் பார்க்கிறார்கள். இந்த செவ்வாய் கிரகம் ஜூன் 7-ஆம் திகதி சூரிய பகவானின் ராசியான சிம்ம ராசிக்கு மாறுகிறது. அவர் ஜூலை 28 வரை சிம்ம ராசியில் இருப்பார்.

செவ்வாய் கிரகத்தின் பார்வை பலன் மற்றும் அமைப்பால் சிம்மம், கன்னி ராசி உட்பட 5 ராசிக்காரர்களுக்கு பலவிதத்தில் நன்மைகளை வழங்குவார். அவர் தரக்கூடிய நன்மைகளை நாம் இங்கு பார்ப்போம்.

சிம்ம ராசி
சிம்ம ராசிக்கு ஜென்ம ஸ்தானத்தில் செவ்வாய் கிரகம் சஞ்சரிக்க உள்ளதால், உங்களுக்கு உடல் மற்றும் மனதளவில் அபார சக்தி கிடைக்கும். இந்த சக்தியை சரியாக பயன்படுத்தினால், வாழ்க்கையில் வரும் எல்லா சவால்களையும் சமாளிக்க முடியும். வேலை மற்றும் வியாபாரத்தில் இருக்கும் தடைகள் நீங்கும். திருமண வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் குறையும். திருமணம் நடக்க காத்திருப்பவர்களின் ஆசைகள் இந்த நேரத்தில் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆனால், நெருப்பு அல்லது மின்சாரம் சம்பந்தப்பட்ட வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். ஆபத்தான வேலைகளில் ஈடுபட வேண்டாம்.

கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பல வருடங்களாக முயற்சி செய்த வியாபார ஒப்பந்தங்கள் இப்போது கிடைக்கும். வேலையில் சம்பளம் உயர்ந்து பொருளாதார நிலை வலுவடையும். செவ்வாய் கிரகத்தின் அருளால் திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். உங்கள் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் நீங்கள் மனதளவில் வலுவடைவீர்கள். குழந்தைகளின் கல்வி சம்பந்தமாக நல்ல செய்திகள் வரலாம்.

துலாம் ராசி
துலாம் ராசியில் செவ்வாய் சஞ்சாரத்தால், துலாம் ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். நீங்கள் செய்ய நினைக்கக்கூடிய வேலையில் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். எந்த வேலை செய்தாலும் அதில் நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நல்ல செய்திகள் தேடி வரும். இதனால் மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும. வியாபாரம் முன்பு இருந்ததை விட சிறப்பாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, மனை என நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல செய்திகள் வரலாம்.

விருச்சிக ராசி
விருச்சிக ராசி அதிபதியான செவ்வாய் பகவான், உங்கள் ராசிக்கு கர்ம ஸ்தானமான 10ம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களின் வேலைகள் சிறப்பாக நடக்கும். இருப்பினும் உங்களின் ஆற்றலை, நேரத்தை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்வது நல்லது. வேலை தொடர்பாக நிதானமாக சிந்தித்து செயல்பட வெற்றி கிடைக்கும். சமூக பணிகள், செய்யக்கூடியவர்களுக்குப் புகழ் அதிகரிக்கும். தந்தையின் ஆரோக்கியத்தை கவனம் தேவை. அரசு வேலை தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.வீடு மனை யோகம் உண்டு. குடும்பத்தில் இருந்து சில நல்ல செய்திகள் வரலாம்.

மீன ராசி
மீன ராசி சேர்ந்தவர்களுக்குச் செவ்வாய் பகவான், 6ம் வீடான நோய், எதிரி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், இந்த காலத்தில், உங்களின் எதிரிகளை வெல்ல முடியும். கடின உழைப்பு செய்ய வேண்டும் என்ற மனநிலை அதிகரிக்கும். இதன் மூலம் வருமானம் கூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தங்கம் மற்றும் தாமிரம் போன்ற உலோக வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. செவ்வாய்க் கிரகத்தால் கிடைக்கும் சக்தியை சரியாக பயன்படுத்தினால், நல்ல பலன்களைப் பெறலாம்.

போட்டியில் மற்றவர்களை விட முன்னேற முடியும். பொறுமையுடன் சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும். இது உங்களுக்கு நன்மை தரும். இப்படி, செவ்வாய் கிரகம் சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்வதால் பல ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இருப்பினும், ஒவ்வொரு ராசிக்காரரும் தங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். பொறுமையுடனும், விவேகத்துடனும் செயல்பட்டால், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

சிறப்புச் செய்திகள்