சமூக செயற்பாட்டாளரும், தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவரும், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவருமான இரத்தினசிங்கம் முரளிதரனை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி, முரளிதரனை எதிர்வரும் (20) ஆம் திகதி காலை 9:00 மணிக்கு பரந்தனிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு பிரிவு தொலைபேசியூடாக அவருக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளது.
இவர் காணி உரிமை, கடற்றொழிலாளர்களின் உரிமை, உட்பட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post Views: 176