3000 சிறுவர்களின் உயிரைக் காப்பாற்றிய பாடகி!

இந்தியாவைச் சேர்ந்த பாடகரும், பாடலாசிரியருமான பாலக் முச்சல், ‘சேவிங் லிட்டில் ஹார்ட்ஸ்’ என்ற நிதி திரட்டும் அமைப்பின் மூலம் 3000 சிறுவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் இணைய வாசிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

32 வயதான பாலக் முச்சல் இதய நோய்களினால் பாதிக்கப்படும் ஏழை சிறுவர்களுக்கு நிதியுதவி வழங்கும் பொருட்டு அவரது சகோதரர் பாலாஷ் முச்சாலுடன் இணைந்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மேடை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இதன் மூலம் கிடைக்கப்பெறும் பணத்தைக் கொண்டு சுமார் 3,000 சிறுவர்களின் உயிரை இதுவரை அவர் காப்பாற்றியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து பாலக் முச்சல் கருத்துத் தெரிவிக்கையில்” இசைக்கச்சேரி மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து இந்த நல்ல காரியத்தை செய்து வருகிறேன்.

இன்னும் 413 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. தற்போது இதுதான் எனது வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமாக உள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவரது பணியைப் பாராட்டி மத்திய அரசு மற்றும் பிற பொது நிறுவனங்கள் பல்வேறு விருதுகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறப்புச் செய்திகள்