இந்திய திரையுலகின் பழம்பெரும் நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா உடல்நலக்குறைவால் காலமானார்.

கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று (11.11.2025) காலை மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் காலமானதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 89 என்பதுடன் தர்மேந்திராவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஹிந்தியில் பாலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்த தர்மேந்திரா, பாலிவுட் ட்டின் ஹீமேன் என்று அழைக்கப்பட்டார்.

அவர், ஹிந்தியில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு பிரகாஷ் கௌர் மற்றும் ஹேமமாலினி என்ற இரு மனைவிகளும், நடிகர்கள் சன்னி தியோல், பாபி தியோல், நடிகைகள் ஈஷா தியோல் மற்றும் அஹானா தியோல், அஜீதா மற்றும் விஜேதா ஆகிய ஆறு பிள்ளைகளும் உள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்