வறிய மக்களை குறி வைக்கும் அரசுஅஸ்வெசும விரைவில் இரத்து!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை விரைவில் இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறித்த விடயத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அம்பலப்படுத்தி உள்ளார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், அஸ்வெசும திட்டம் மக்களின் வறுமையைக் குறைப்பதற்குத் தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு சமூகப் பாதுகாப்பு திட்டமானது வறுமை ஒழிப்பு, முதலீடு, சேமிப்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை உறுதி செய்ய வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்