இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் உண்ணிப்பாக அவதானித்து வருவதாக அதன் பேச்சாளர் நபிலா மஸ்ராலி தெரிவித்துள்ளார்.
சகல அரசியல் கட்சிகளும், சமாதானத்துடனும், ஜனநாயக ரீதியிலுமான சட்டபூர்வமானதொரு அரச நிர்வாக மாற்றத்தை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என அவர் தமது ட்விட்டர் கணக்கில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையினை சீரமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது சகல கட்சிகளின் தலைவர்களினதும் பொறுப்பாகும் என்பதை உணர்ந்தும் செயற்பட வேண்டும்.
அத்துடன் இலங்கைக்கு இயலுமான மேலதிக உதவி மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்குவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் நபிலா மஸ்ராலி தமது ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 100





