அர்ச்சுனா ,லோச்சனாவாக மாறியதால் சந்தேகநபராக ஏற்றுக்கொள்ள முடியாது – நீதிமன்றம்!
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கின் சந்தேகநபர் தாம் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றில் ஆஜராகியிருந்த நிலையில் அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக அவரை சந்தேக நபராக ஏற்றுக்கொண்டார்.
சந்தேக நபர் இராமநாதன் அர்ச்சுனா என்ற பெயரில் தேசிய அடையாள அட்டையுடன் நீதிமன்றில் ஆஜராகியுள்ள போதிலும், இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அசல் பி அறிக்கையில் அநுராதபுரம் பொலிஸார் சந்தேகநபரின் பெயர் அர்ச்சுனா என்பதற்கு பதிலாக லோச்சனா என குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்தார்.
இதன்படி, இன்று நீதிமன்றத்தில் ஆஜரான சந்தேகநபரின் பெயருக்கும், பொலிஸ் பி அறிக்கையினால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட பெயருக்கும் முரண்பாடு காணப்படுவதால், இராமநாதன் அர்ச்சுனவை சந்தேகநபராக ஏற்றுக்கொள்ள முடியாது என நீதவான் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கையிடுமாறு அநுராதபுரம் பொலிஸாரை நீதிமன்றம் கோரியுள்ளது.