வைத்தியர் அர்ச்சுனாவின் வாயை பொத்தச் செய்த அனுர

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வடக்கு,கிழக்கு வைத்தியசாலைகளில் பணியாற்றுக்கின்ற சிங்கள மொழி மருத்துவர்களுக்கும் தமிழ் மருத்துவர்களுக்கிடையே ஒற்றைமையினை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இன்றைய தினம் (31)யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அவர் உரையாற்றுகின்ற போது இன முறன்பாடன கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

வடக்கு,கிழக்கு வைத்தியசாலைகளில் சேவையாற்றுகின்ற சிங்கள மருத்துவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு தமிழ் மருத்துவர்கள் முயற்சிப்பதாகவும், எற்கனவே அவ்வாறான ஒர் உயர் மருத்துவ அதிகாரியினை வடபகுதியை சேர்ந்த தமிழ் மருத்துவர்கள் ஒன்றிணைந்து வெளியேற்றியதாக ஜனாதிபதி மூன்னிலையில் குற்றம் சாட்டியுள்ளார்.

இங்கு சிங்கள மொழி மருத்துவர்கள் சேவையாற்றுவதை தமிழ் மருத்துவர்கள் யாரும் விரும்பவில்லை என்பது போன்ற மாய தோற்றத்தை உருவாக்க அர்ச்சுனா இராமநாதன் முயற்சிப்பது கண்டிக்க தக்கவிடயமாகும்.

நீண்டகாலமாக மருத்துவத்துறைக்கு எதிரான விமர்சங்களை அவர் முன்வைத்து வந்துள்ளார். அதனூடாவே பாராளுமன்ற உறுப்பினருமாகினர் ஆகியிருந்தார்.
ஆனால் அவர் வைத்தியசாலைகளின் வளர்ச்சியில் எவ்வித பங்களிப்புகளுயும் வழங்கியிருக்க வில்லை மாறாக எதிர்வினையே ஆற்றிவருகின்றார்.

வடக்கில் காணப்படுகின்ற வைத்தியசாலைகளின் குறைபாடுகள், தேவைகள் தொடர்பில் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்து வைத்தியசாலைகளை வளர்ச்சிபாதைக்கு இட்டுச் செல்வதில் கவனம் செலுத்தி அது தொடர்பில் இன்றைய தினம் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்படபோது பல இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளார்.

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது அர்ச்சுனா இராமநாதனின் முரணான தொடர்நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவருடைய உரையாடலை இடைநிறுத்தி முற்றுப்புள்ளி வைத்தார் .

சிறப்புச் செய்திகள்