வெள்ளைகரிசாலை இதன் தாவரவியல் பெயர் Eclipta prostrata ஆகும். இதற்க்கு கரிசலாங் கண்ணி, கையான், கரிப்பான், பிருங்கராஜம், கையாந்தகரை என்ற மாற்று பெயர்களும் உண்டு.
இதன் முழுதாவரமும் மருத்துவ குணமுடையது.இத்தாவரம் கல்லீரலை உறுதிபடுத்தும்,வீக்கத்தை குறைக்கும்,காமாலையை குணப்படுத்தும்,உடலைபலமாக்கும்,மலமிளக்கும்,ஆஸ்த்துமாவை கட்டுபடுத்தும்,முடிவளர்ச்சியை தூண்டுவதாகவும் கூறுகிறார்கள்.
இத்தாவரம் இரத்தத்திலுள்ள அமிலத்தன்மையை குறைப்பதால் இரத்த சோகை,தோல்நோய்களை கட்டுபடுத்துவதாகவும் கூறுகிறார்கள்.
மேலும் இதனை கீரையாக தொடர்ந்து சாப்பிடுவதால் கண்பார்வை தெளிவடைவதாகவும், இதன் இலையை பருப்புடன் கடைந்து,நெய் சேர்த்து சாப்பிடுவதால் அல்லது தினமும் காலையில் 5 இலைகளை மென்று சாப்பிட்டு வந்தாலும் மலசிக்கல் தீர்வதாகவும்,
பசுமையான இலைகளை பசையாக அரைத்து கொட்டை பாக்களவு,ஒரு டம்ளர் போரில் கலந்து இருவேலை என ஏழுநாட்கள் உள்ளுக்கு சாப்பிட்டுவர மஞ்சள் காமாலை தீர்வதாக கூறுகிறார்கள்,இந்த ஏழுநாட்களும் உப்பு,புளி நீக்கி பத்தியம் இருக்க வேண்டும்.
இலையை அரைத்து வீக்கத்தின் மீது பூசிவர வீக்கம் குறைவதாக கூறுவதோடு,இளநரை,தலைமுடி அடர்த்தியாக வளர,முடி கருமையாக வளர,இருமலை போக்க இதுபயன்படு வதாகக் கூறுகிறார்கள்





