நடிகர் தனுஷ் இயக்கி நடித்து அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் இட்லி கடை. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் என மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 1ம் தேதி இப்படம் வெளிவரவுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இருக்கும் இட்லி கடை திரைப்படத்தில் தனுஷுக்கு தங்கையாக ஷாலினி பாண்டே நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஷாலினி பாண்டே தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post Views: 174





