உள்ளூர் ஆடை உற்பத்தியாளர்களுக்கு தேவையான உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்வை வரிச்சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் அமைச்சர் இது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.
கொவிட்-19 தொற்றின் தீவிர பரவல் நிலையிலும், இலங்கைக்கு அந்நிய செலாவணியை பெற்றுத்தரும் பிரதான துறையாக ஆடைக்கைத்தொழில் காணப்படுகிறது.
எனினும், தற்போது மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக உள்ளூர் ஆடை உற்பத்தியாளர்கள் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
அதற்கு தீர்வளிக்கும் வகையில், ஒத்திசைவு குறியீட்டு (HS Code) இலக்கம் 19 இன் கீழ், உள்ளூரில் தயாரிக்கப்படாத உபகரணங்களின் இறக்குமதிக்கு தீர்வை வரிச் சலுகை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 97





