இலங்கையில் குளிர்சாதனப் பெட்டி பயன்படுத்தும் மக்களுக்கு எச்சரிக்கை

அதிகளவிலான ஆற்றல் இழப்பு பெரும்பாலும் பழைமையான மின் சாதனங்களால் ஏற்படுவதாக இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த இழப்பு பெரும்பாலும் 10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படுவதாக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியின் போது அதிகாரசபையின் பணிப்பாளர் ஜெனரல் ஹர்ஷ விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். “ஆய்வுகளின் போது, ​​இலங்கையில் திறமையற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் அதிக மின்சாரக் கட்டணத்திற்குக் காரணம் என்பதை நாங்கள் அறிந்தோம். இந்தப் பிரச்சனை பொதுவாக 10 […]

ஐநாவின் உதவியை நாடும் இலங்கை,உயிருடன் கொன்று புதைக்கப்பட்ட தமிழர்கள்!

தடயவியல் நிபுணர்கள் உட்பட ஐக்கிய நாடுகளின் (UN) மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மூலம் தொழில்நுட்ப உதவியைப் பெற தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் அகழப்படும் மனித புதைகுழிகளில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண உதவுவதும் இத்தகைய ஒத்துழைப்பில் அடங்கும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மனித புதைகுழிகளை அகழும் […]

முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்தி காட்டுங்கள் ,பொதுஜன பெரமுன சவால்!

நல்லாட்சி காலத்தில் மாகாணசபைத் தேர்தல் மாயமாவதற்கு ஜே.வி.பியும் துணை நின்றது. இன்று ஜனநாயகம் பற்றி பாடமெடுக்கும் அக்கட்சி முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்தி காட்ட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் செயலாளர் இவ்வாறு வலியுறுத்தினார். ’30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்த பிறகு வடக்கு, கிழக்கு மக்களுக்கு அவர்களுக்குரிய பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்குரிய வாய்ப்பை மஹிந்த ராஜபக்ச ஏற்படுத்திக்கொண்டுத்தார். தோல்வியென தெரிந்தும் வடக்கு மாகாணசபைத் தேர்தலை […]

இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி!

2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 4.9% வளர்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன . தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (15) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) நிலையான விலையில் (2015) 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கு 2,883,559 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 2,749,504 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. அதன்படி, […]

நாட்டில் ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

செவித்திறன் குறைபாடுகள், ஒரு கண்ணில் பார்வை இழப்பு மற்றும் உடல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த முன்னோடித் திட்டம் 2022 ஆம் ஆண்டு கம்பஹா மாவட்டத்தில் குறிப்பிட்ட விதிமுறைகளின் கீழ் தொடங்கப்பட்டதாகவும் அந்தக் காலகட்டத்தில் எந்த விபத்துகளும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில், 18 முதல் 60 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன. இதற்கிடையில், இந்த உரிமங்கள் ஒவ்வொரு இரண்டு முதல் […]

நாட்டில் வாகன கடன் பெற உள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு!

வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்கும் போது பின்பற்றப்பட வேண்டிய செயன்முறைகளை புதுப்பித்து, மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இலத்திரனியல், ஹைபிரிட் உட்பட எரிசக்தியை அடிப்படையாக கொண்ட முன்னைய வகைப்படுத்தல்கள் நீக்கப்பட்டுள்ளன. இலத்திரனியல் பிரிவின் கீழ் வாகனத்தின் பெறுமதியில் 90 வீதம் வரை நிதி வசதியை பெறும் சந்தர்ப்பம் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதுடன், வணிக வாகனங்களுக்கென 80 வீதமும், மோட்டார் வாகனங்கள், SUV மற்றும் வேன்களுக்கென 60 வீதமும், முச்சக்கர […]

இசைத்துறையில் இங்குள்ள பிள்ளைகளுக்கு எனது ஆதரவு நிச்சயம் என யாழில் தென்னிந்திய பாடகர் ஸ்ரீனிவாஸ் உறுதி!

இங்குள்ள பிள்ளைகள் இசைத்துறையில் மிளிர இசை தொடர்பான வகுப்புக்கள், பயற்சிகளுக்கு என்னால் முடிந்த ஆதரவை நிச்சயமாக வழங்குவேன் என தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஸ்ரீனிவாஸ், நேற்றையதினம்(18) மருத்துவ பீடத்தில் தனது மகள் சரண்யாவுடன் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “யாழ்ப்பாணத்திற்கு வந்தது பெரும் சந்தோசம். உலகில் எந்த நாட்டுக்கு […]