இலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றின் முதன்முறையாக பெருந்தொகை பணத்தை பரிசாக பெற்ற நபர்!

இலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றின் மிகப்பெரிய பணப்பரிசை வென்ற நபருக்கு அதற்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 474,599,422 ரூபாய் மெகா சூப்பர் பரிசு வெற்றவருக்கான காசோலையை தேசிய லொத்தர் சபை நேற்று வழங்கி வைத்தது. வெற்றி பெற்ற லொத்தர் சீட்டை கொகரெல்ல பகுதியை சேர்ந்த விற்பனை முகவரான எச்.ஏ. ஜானகி ஹேமமாலா விற்பனை செய்துள்ளார். இலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றில் இதுவரை வென்ற மிகப்பெரிய சூப்பர் பரிசு இதுவாகும். இதேவேளை, முன்னதாக லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய பரிசாக […]

நாடு முழுவதும் இந்த ஆண்டுக்குள் காணிகள் இன்றி தவிப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

இந்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் காணி இல்லாத ஐம்பதாயிரம் பேருக்கு நில உறுதிகள் அல்லது அனுமதிப்பத்திரங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த தகவலை காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்த மாத இறுதிக்குள் கிளிநொச்சியில் இந்தத் திட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டில் காணிகள் இல்லாத லட்சக்கணக்கான மக்கள் இருப்பதாக காணி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையர்களுக்கு இலவசமாக பிரித்தானியா செல்ல வாய்ப்பு!

பிரித்தானியாவின் செவனிங் உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. செவனிங் என்பது பிரித்தானிய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு நிதியுதவியாகும், இது சர்வதேச மாணவர்களுக்கு முதுகலை படிப்பிற்காக வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பிரித்தானியாவில் ஒரு வருட முதுகலை படிப்பை மேற்கொள்ள விரும்புவோருக்கு நிதியுதவி செய்கிறது. ஒரு அறிக்கையை வெளியிட்டு, உதவித்தொகை திட்டத்தில் ஆர்வமுள்ள மாணவர்களை விண்ணப்பிக்குமாறு உயர்ஸ்தானிகராலயம் நினைவூட்டியுள்ளது. பேஸ்புக்கில் ஒரு பதிவில், ஒகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் […]

இளம் கோடீஸ்வர தொழிலதிபர் கொலை,பாடசாலை மாணவன் உட்பட இருவர் கைது!

புத்தளம், கட்டுனேரிய பகுதியில் கோடீஸ்வர தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் பாடசாலை மாணவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிரிகம்பள பகுதியில் உள்ள கார் கழுவும் இடத்திற்கு தண்ணீர் வரும் குழாயில் தொழிலதிபரின் உடலை மறைத்து வைத்ததற்காக சகோதரர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 19 வயது மெக்கானிக் மற்றும் அவரது 15 வயது தம்பி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 15 வயது சகோதரன் மாரவில பிரதேசத்தில் உள்ள உள்ள பிரபலமான […]

தமிழ் மக்களை குறிவைத்த புலனாய்வு நடவடிக்கை!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டு வருகின்ற மனித எச்சங்கள் தமிழ் மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அண்மையில், குறித்த புதைகுழியில் இருந்து யுனிசெஃப் பையுடன் ஒரு பச்சிளங் குழந்தையின் உடல் எச்சம் மீட்கப்பட்டதன் வேதனை இன்னமும் ஆறாத நிலையில் அனைவரது மனதையும் வாட்டிக் கொண்டு இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைகளின் ஒரு பகுதியே செம்மணி மனித புதைகுழி. அவ்விடத்திலிருந்து தோண்டப்பட்டு வரும் உடலங்கள் முள்ளிவாய்க்கால் படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்கள் என கூறப்படுகின்றது. […]

இலங்கையில் தங்கியிருந்த பெருமளவு வெளிநாட்டவர்கள் இன்று நாடு கடத்தல்!

இலங்கையில் கைது செய்யப்பட்ட 85 சீனப் பிரஜைகள் இன்று காலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் தங்கியிருந்த போது சைபர் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 85 சீனப் பிரஜைகள், நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த சீனப் பிரஜைகள் 05 பேருந்துகளில் ஏற்றப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, கடுமையான பாதுகாப்பின் கீழ் விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளனர். 85 பொலிஸ் அதிகாரிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் […]

இஸ்ரேலில் இருந்து இலங்கை வர விரும்புவோருக்கு விசேட அறிவிப்பு

இஸ்ரேலில் இருந்து எகிப்து வழியாக இலங்கைக்கு பயணிக்க விரும்பும் இலங்கையர்களுக்கு, விசா வழங்க இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் முடிவு செய்துள்ளது அத்தகைய ஆவணங்கள் தேவைப்படும் இலங்கையர்கள் தங்கள் கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்களுடன் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வருமாறு தூதரகம் அறிவுறுத்துகிறது. செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசாக்களை வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு எகிப்து வழியாக பயணிக்க 96 மணிநேர விசா வழங்கப்படுகிறது, இதற்காக 50 அமெரிக்க டொலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக, இஸ்ரேலிய தூதரகங்கள் 120 ஷெக்கல்கள் எல்லைக் […]