இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட 85 வீத சிறுமிகள் காதல் என்ற பெயரில் ஏமாறுகிறார்கள்!

16 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 85 வீதமானோர் காதல் என்ற பெயரில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்குமாறும் அவர் கூறினார். சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு மாபெரும் பொறுப்புள்ளது. எனவே சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுக்க முயற்சி எடுப்போம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை!

உயர்கல்வி பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பல மாணவர்கள் தங்கள் பரீட்சை முடிவுகளை முகநூலில் பதிவிடுவதைப் பார்க்கிறோம். அதை செய்யக்கூடாது. அந்த பரீட்சை எண்ணில் இருந்து வேறு ஒருவரின் விண்ணப்பம் அல்லது தேசிய அடையாள அட்டையின் எண் யாருக்காவது தெரிந்தால், அந்த விண்ணப்பத்தை நிரப்பினால், மீள்பாிசீலணை […]

இன்று முதல் 50 கிலோகிராம் சீமெந்து பையின் விலை குறைப்பு.

மே மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோகிராம் சீமெந்து பையின் விலை 50 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதாக சீமெந்து தொழிற்துறை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன் பிரகாரம், 50 கிலோகிராம் சீமெந்து பொதியின் புதிய அதி உயர் சில்லறை விலை 2400 ரூபாயாக அமைந்திருக்கும். இந்த விலைக் குறைப்புடன் நிர்மாணத் தொழிற்துறை ஊக்கம் பெறும் என தாம் எதிர்பார்ப்பதாக சீமெந்து தொழிற்துறை நிறுவனங்கள் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஆஸ்துமா நோய் தீவிரம்; நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னணி

உலகில் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை முன்னணிக்கு வந்துள்ளதாக இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் மக்கள் தொகையில் 10 வீதம் முதல் 15 வீதம் வரை ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியோர்களை பெரும் மன மற்றும் உடல் உபாதைகளுடன் பாதிக்கிறது எனவும் அவர் கூறினார். ஆஸ்துமா சரியாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது உயிரிழப்புக்குக் கூட வழிவகுக்கும். 95 வீதமான ஆஸ்துமா நோயாளிகளை […]