மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளிப்பு!
கல்வி மற்றும் பொருளாதார முகாமைத்துவம் ஆகிய துறைகளின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இன்று நடைபெற்றது. டில்லியில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, இந்திய முதலீட்டில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக மீள ஆரம்பிப்பது குறித்து விசேடமாக ஆராயப்பட்டது. இந்த செயற்பாடுகளை ஆராய்வதற்காக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக ஜெயசங்கர் […]
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை!
அரசியலமைப்பிற்கு அமைவாக பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த கொள்கையை பாதுகாக்கும் பொறுப்பு நிறைவேற்று, சட்டவாக்க, நீதி உள்ளிட்ட 3 துறைகளுக்கும் இருப்பதை எவரும் மறுக்க முடியாது எனத் தெரிவித்தார். எவரேனும் அதனை மாற்ற விரும்பினால் உடனடியாகச் சென்று அரசியலமைப்பை மாற்றுமாறு ஜனாதிபதி கூறினார். ஹோமாகம, கிரிவத்துடுவவில் நிர்மாணிக்கப்பட்ட “குருதேவ சுவ அரண” பிக்குகளுக்கான நிலையத்தை இன்று (01) திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். […]
ரணில், பசில் இன்று ஐந்தாம் சுற்று பேச்சு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் இன்று சனிக்கிழமை (04) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு – மஹகமசேகர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதற்கான உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவருகிறது. பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்பிய பின்னர் இருவருக்கும் இடையில் ஐந்தாவது தடவையாக இடம்பெறும் சந்திப்பு இது. ஜனாதிபதித் […]
அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வாருங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி,ஜே.வி.பி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு. ஐ.தே.க.யைக் குழிதோண்டிப் புதைக்க சிலர் தயாராக இருந்தாலும், புதைப்பதற்குத் தயாரான பொருளாதாரத்தை மீட்டெடுத்தது ஐக்கிய தேசியக் கட்சிதான். நாட்டில் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டுள்ளதால் காலிமுகத்திடலில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவருக்கு செத்தம் வீதியில் மே தினக் கூட்டத்தை நடத்த முடிந்துள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவோம் – ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பு. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை வெற்றியடையச் […]
தோட்ட மக்களின் பிரச்சினைகளை நான் ஒருபோதும் மறக்கவில்லை – ஜனாதிபதி ரணில்
பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தாம் ஒருபோதும் மறக்கவில்லை எனவும், ஜனாதிபதி என்ற வகையில் எதிர்காலத்தில் அவர்களின் உரிமைகளை தாம் உறுதிப்படுத்துவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். கொட்டகலை பொது மைதானத்தில் இன்று (01) இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, லயன் அறைகள் சட்டபூர்வமான கிராமங்களாக மாற்றப்பட்டு அவற்றின் வசதிகள் மேம்படுத்தப்படும் என மேலும் குறிப்பிட்டார். அதற்கான […]