திடீரென வெளியான அதி விசேட வர்த்தமானி!

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக விஜயதாச ராஜபக்ஷ அந்த அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தமையே இதற்குக் காரணமாகும்.

‘இதயம்’ சின்னத்தில் ரணில்?

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு, அது குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் தம்மை ஆயத்தப்படுத்தி வருகின்ற நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகின்றார். இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்க “இதயம்” சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக பிரதான இணையத்தளங்களில் செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் அவ்வாறான பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. ஆகவே, ஜனாதிபதி ரணில் “இதயம் ” சின்னத்தில் போட்டியிடுவதாக பகிரப்படும் செய்திகள் உண்மையா என factseeker ஆராய்ந்து பார்த்தது. […]

இஸ்மாயில் ஹனியே படுகொலை: ஜனாதிபதி கண்டனம்!

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின்(Ismail Haniyeh) படுகொலைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டனம் வெளியிட்டுள்ளார். ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலை செய்யப் பட்டதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அத்தகைய செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ரணில் பகிரங்க அறிவிப்பு – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்கான கட்டுப் பணத்தை ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்துள்ளார். காலியில் இன்று நடைபெற்ற ஒன்றிணைந்து வெல்வோம், காலியில் நாம் பொது கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்தார். அத்தோடு, சவால்களை எதிர்கொள்ள முடியாமல் ஓடும் தலைவன் நான் அல்லன். நெருக்கடியான நேரத்தில் நாட்டை பொறுப்பேற்று, முன்னோக்கிச் சென்றுள்ளதாகவும் வங்குரோத்து நிலையிலிருந்து நாடு தற்போது மீண்டுவருவதுடன், வரிசை யுகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக […]

இலங்கைக்கு அடுத்த மாதம் விஜயம் செய்யவுள்ள எலான் மஸ்க்

உலகின் முதல் நிலை பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்க வர்த்தகர் எலான் மஸ்க் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் தனது Starlink செயற்கைக்கோள் இணைய சேவையை அறிமுகப்படுத்துவதற்காக இந்த விஜயம் அமையப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இணைய வசதி சேவையை இலங்கையில் வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முன்னதாக அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. Starlink செயல்பாடுகளுக்குத் தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் தற்போது வேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன.

நினைவேந்தல் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. சிரேஷ்ட பேராசிரியர் ஜகத் வீரசிங்க, கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டி. சனாதனன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பர்ஸானா ஹனீபா, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் துஷாரி […]

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளிப்பு!

கல்வி மற்றும் பொருளாதார முகாமைத்துவம் ஆகிய துறைகளின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இன்று நடைபெற்றது. டில்லியில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, இந்திய முதலீட்டில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக மீள ஆரம்பிப்பது குறித்து விசேடமாக ஆராயப்பட்டது. இந்த செயற்பாடுகளை ஆராய்வதற்காக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக ஜெயசங்கர் […]