வெள்ளத்தில் மூழ்கிய நல்லூர்!

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நல்லூர் ஆலய பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
12 மணித்தியாலத்தில் புயலாக மாறவுள்ள ஆழ்ந்த காற்றீத்த தாழ்வு மண்டலம்.

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக (பெங்கல் புயல்) மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் தென் கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாகையில் இருந்து 400 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவிலும் உள்ளதாக தகவல் […]
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான அறிவுறுத்தல்!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும் இடர்பாடுகளில் இருந்து மக்களை மீட்க உதவும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களின் வழிகாட்டுதலில், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் அவசர உதவிகளை மேற்கொள்ள இடருதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு தயாராக உள்ளது. யாழ் மாவட்ட தொடர்புகளுக்கு:- மானிப்பாய்தனகோபி – 077 925 8745உஷாந்தன் – 077 164 1413 நல்லூர்துசி- 076 804 6435ஜனா :- 077 524 8450விசாகன்:- 075 541 7577 வட்டுக்கோட்டைசபேசன்:- 077 285 0554சசிதரன்:- […]
யாழ்ப்பாணத்தின் தேர்தல் நிலவரம்!

நாடாளுமன்றத் தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8 மணியிலிருந்து ஆரம்பமானது. வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகின்றன. நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளில் வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்ல போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட […]
அநுரவின் வெற்றியை கொண்டாடும் யாழ்ப்பாணம்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆதரவாளர்கள் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் இன்று காலை பொங்கல் பொங்கி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை ஆதரவாளர்கள் கொண்டாடியுள்ளனர். இதன்போது பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
யாழில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள்: சபாநாயகருக்கு சிறிதரன் கடிதம்!

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் ஈடுபடுகின்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவதாகவும் அதனை கட்டுப்படுத்தாமல், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் அசமந்த போக்குடன் செயற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார். கொடிகாமத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” யாழ்ப்பாணம் இந்து கல்லுாரிக்கு அருகில் உள்ள எனது இல்லத்திற்கு முன்பாக 4 மோட்டார் சைக்கிள்களில் இனந்தெரியாத 9 பேர், முகத்தையும் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டையும் கறுப்பு துணிகளால் மறைத்தவாறு, வாள்களை […]
கல்வித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும், சஜித்!

யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்து கலந்துரையாடியதுடன் நாடாளுமன்றில் குறித்த விடயம் தொடர்பாக பேசுவதாகவும் வாக்குறுதியளித்தார். வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போராட்டகாரர்களுடன் கலந்துரையாடியிருந்தார் இதன்போது எமது ஆட்சி உருவாகும்போது கல்வித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவருவதாகவும், மாற்றுத் திறனாளி பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் […]