இந்தியா – இலங்கை இணைப்பு பூர்த்தி

இந்தியா – இலங்கைக்கு இடையில் தரை மார்க்க இணைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அது குறித்து எதிர்வரும் நாட்களில் ஆராயவிருப்பதாகவும் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மன்னார் மறை மாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோவை மன்னார் ஆயர் இல்லத்தில் இன்றுகாலை சந்தித்தார். இந்தச் சந்திப்புத் தொடர்பில் அரச தலைவர் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், மன்னார் – பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவை மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி […]

ஆந்திர முதல்வர் இராஜினாமா!

ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டி இன்று மாலை 4 மணிக்கு தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்திருப்பதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி புதிய முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு எதிர்வரும் 09 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில், ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது. தெலுங்கு தேசம் கூட்டணி 175 தொகுதிகளில் 160 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. இந்நிலையில், இந்திய பிரதமர் […]

இந்தியாவில் வெப்பநிலையால் 15 பேர் உயிரிழப்பு!

வட மற்றும் மத்திய இந்தியாவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வெப்பம் தொடர்பான நோய்களால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை நேற்று ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பத்து இறப்புகள் பதிவாகியுள்ளதுடன் பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட் மாநிலங்கள் மற்றும் தலைநகர் டெல்லியில் இருந்து வெப்ப தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்நாட்களில் இந்தியாவில் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருவதுடன் ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், வெப்பநிலை […]

இந்திய மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்ய இலங்கைக்கு அழைப்பு !

இந்திய மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் சர்வதேச தேர்தல் பார்வையாளர் நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய தேர்தலொன்று நடைபெறுவதைக் காண்பதற்காக 23 நாடுகளிலுள்ள தேர்தல் முகாமைத்துவ அமைப்புகளுடன் தொடர்புடைய 75 சர்வதேச பார்வையாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையகம் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, மே மாதம் 4ஆம் திகதி முதல் 9ஆம் […]

மகனை பார்க்கச் சென்ற தந்தையை கட்டிவைத்து மூக்கை கடித்த மச்சான்மார்

“கதவை திறக்காத மனனே…அப்பாவ பார்க்க விடமாட்டாங்க… அவங்கள விரட்டுப்பா.. எனக்கு பயமா இருக்கு” இணையத்தை கதிகலங்க வைத்த ஒரு காணொளி நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை கண்ணீரில் நனைத்தது. என்னதான் நடந்தது? இந்த தந்தை மகன் பாசப்போராட்டம் எதற்காக? கண்ணியாகுமரி – மணவாளக்குறிச்சியை சேர்ந்த பி.எல் பட்டதாரி பிபின் பிரியன் மற்றும் பிலாங்கலை பகுதியைச் சேர்ந்த ஜெபபிரியாவும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றார்கள். இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கின்றார். ஆனாலும், […]