லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி அதிரடி கைது!

படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் மஹரகம, நாவின்ன பகுதியில் சற்று முன்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு மாநில புலனாய்வு சேவையின் ஆதரவும் கிடைத்ததாக கூறப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேக நபர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட நிலையில், துப்பாக்கிதாரி பொலிஸாரைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றிருந்தார்.

இதனை தொடர்ந்து அவரின் புகைப்படத்தை ஊடகங்களில் வெளியிட்டு, அவரைப் பற்றி தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே சற்று முன்னர் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்