கொழும்பில் ஒரு நபரின் ஒரு மாதசெலவு 13,421 ரூபா?

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் அதிகாரபூர்வ வறுமைக் கோடு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 2022 மாதம் தொடர்பில் வெளியாகியுள்ள இந்த புதிய தரவுகளின்படி,தேசிய ரீதியில் ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்தபட்ச செலவு ரூ. 12,444 என கணிக்கப்பட்டுள்ளது.

இது தவிர அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்ச செலவு மாவட்டத்திற்கு ஏற்ப தனித்தனியாக கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் ஒருவரது செலவு ஒப்பீட்டு ரீதியில் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளதோடு கொழும்பு மாவட்டத்தில் ஒருவரது ஒருமாத செலவீனம் ரூ. 13,421 என கணிப்பிடப்பட்டுள்ளது .

மொனராகலை மாவட்டமானது குறைந்தபட்ச செலவு கொண்ட மாவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அத்தொகை ரூ. 11,899 ஆகும்
2022 ஜூன் மாதத்தில் முந்தைய மாதத்துடன் ஒப்பிட்டு தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இலங்கையின் பணவீக்கம் 2022 ஜூலையில் 60.85 ஆகவும் உணவுப் பணவீக்கம் 90.9% ஆகவும் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அரச தரவுகள்

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்