இந்திய குடியரசு தின விழா கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகம், கண்டி இந்தியத் துணைத் தூதரகம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவற்றில் வடமாகாண அரசியல் வாதிகளை யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்திற்கும் கிழக்கு மற்றும் ஏனைய மாகாண அரசியல் பிரமுகர்களை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கும் அழைப்பு விட்டிருந்தனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஊடகவியலாளர் வித்தியாதரனிற்கான அழைப்பு யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தினால் வழங்கப்பட்டது.

சிறிதரன் வருவதால் அங்கு எங்களால் வர முடியாது எமக்கு கொழும்பை மாற்றி தருமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்டனர்.
காரணத்தை விரிவாக கூறுவதற்கு குறித்த அதிகாரி விரும்பவில்லை என யாழ்ப்பாண புலனாய்வுக்கு தகவல் அனுப்பிய பிரமுகர் குறிப்பிட்டுள்ளார், விரைவில் வெளிவரும் என நம்பப்படுகிறது.
யாழ்ப்பாண புலனாய்வு