கட்சிக்கு எதிராக வழக்கு போட்டவருக்கு சார்பாக வாதாடிய சுமந்திரன்: நீதிமன்றில் உண்மை அம்பலம்!

நேற்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பான வழக்கு இணக்கப்பாட்டின் சந்தர்ப்பங்களை ஆராய எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தெரிவுகள் அனைத்தையும் 326 பொதுச்சபை உறுப்பினர்களுடன் மீள நடாத்த தயார் என்று பகிரங்கமாக சிறீதரன் தரப்பு தெரிவித்திருந்த நிலையில், சுமந்திரன் தரப்பும் ஏற்கனவே எழுத்துமூலம் இதே நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்கள்.

2024 ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்ற தலைவர் தெரிவில் சிறீதரனிடம் 50 வாக்குகள் வித்தியாசத்தில் சுமந்திரன் தோற்ற பின் சிறீதரனை பதவியேற்கவிடாமல் தடுக்கும் நோக்கில் போடப்பட்ட இந்த வழக்கு சுமந்திரனால் தாக்கல் செய்ப்பட்டது என்ற சந்தேகம் பலரால் வெளியிடப்பட்டு வந்தது. நேற்றைய நாளில் அந்த சந்தேகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று நீதிமன்றி வழக்கு இணக்கப்பாட்டிற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சிறீதரன், குகதாசன், யோகேஸ்வரன் ஆகியோரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி புவிதரன் ஆஜராகியிருந்தார்.

இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி புவிதரன் அவர்கள், தமது தரப்பு இணக்கப்பாட்டு முன்மொழிவாக வழக்காளி குறிப்பிட்ட தலைவர் தெரிவு நாளில் பட்டியலில் இல்லாது வாக்களித்த 12 பேரை நீக்கிவிட்டு, தமிழரசுக்கட்சி யாப்பு உறுப்புரை 5, உறுப்புரை 7 இன் படி மத்திய குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி 2023 நவம்பர் மாதம் 5ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற மத்தியகுழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவையும் (DS Division) ஒவ்வொரு தொகுதிகளாக கருதி பொதுச்சபை உறுப்பினர்களை தெரிவு செய்வோம் என்ற தீர்மானத்தை ஏற்று அதன்படி வடக்கு கிழக்கில் 57 தமிழ் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்தும் தலா 5 பேர் படி 285 உறுப்பினர்களை பொதுச்சபைக்கு தெரிவு செய்து, மத்தியகுழுவில் உள்ள 41 உறுப்பினர்களையும் சேர்த்து 326 பொதுச்சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன் தலைவர், செயலாளர் உள்ளிட்ட அனைத்து தெரிவுகளையும் மீள நடாத்த தாயர் என்று நீதிமன்றில் தமது தரப்பு சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

இதன் போது குறுக்கிட்ட சக எதிராளியான சுமந்திரன் அவர்கள், இந்த இணக்கப்பாட்டை ஏற்க முடியாது. பொதுச்சபை உறுப்பினர்கள் 161 தான். வடக்கு கிழக்கில் 23 தொகுதிகள் தான் உள்ளன, அதோடு கொழும்பையும் சேர்த்து மத்திய குழு உறுப்பினர்கள் 41 பேரையும் சேர்த்து 161 உறுப்பினர்கள் தான் பொதுச்சபை என கட்சியை நீதிமன்றில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் வழக்கு போட்டவரின் சார்பான சட்டத்தரணியாக வாதிட்டார்.

இதன்போது பதில் வாதம் செய்த சிறீதரன் தரப்பு சட்டத்தரணி புவிதரன் அவர்கள், 2023 ஆம் ஆண்டு தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கட்சியின் இறுதி யாப்பில் தொகுதி தொடர்பாக தெளிவான எந்த வரவிலக்கணங்களும் வழங்கப்படவில்லை. தொகுதி முறை 1978 ஆம் ஆண்டுக்கு பின் இலங்கையில் நடைமுறையில் இல்லை. அதனால் தொகுதி தொடர்பான குழப்பம் இருந்ததால் தான் 2023 நவம்பர் நடைபெற்ற மத்தியகுழு கூட்டத்தில் மத்திய குழுவிற்கு கட்சி யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி ஒரு பிரதேச செயலாளர் பிரிவை ஒரு தொகுதியாக தீர்மாணித்தார்கள் என தெளிவான வாதத்தை முன்வைத்தார்.

அத்தோடு வழக்கின் 3ஆம் தவணையில் சுமந்திரன் தரப்பில் முன்வைக்கப்பட்ட எழுத்துமூல பதிலில் தலைவர் தெரிவில் எந்த பிழையும் நடைபெறவில்லை, 2023 ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்ற தலைவர் தெரிவு கட்சி யாப்பின் படியே நடைபெற்றது என தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதனையும் ஜனாதிபதி சட்டத்தரணி புவிதரன் மன்றிற்கு தெளிவுபடுத்தினார்.

வழக்கு தாக்கல் செய்யப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் தனக்கும் வழக்கிற்கும் எந்தவித சம்பந்தம் இல்லை என்று கூறிவந்த சுமந்திரன் இப்போது வழக்காளி சார்பாக மாறியிருப்பதன் மூலம் வழக்கின் பின்புலம் சுமந்திரன் தான் என்ற உண்மை வெளிப்படையாக அம்பலப்பட்டுள்ளது.

தற்போது சுமந்திரன் கூறும் 161 பேர் தான் பொதுச்சபை உறுப்பினர்கள் என்றால், ஏன் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்ற தலைவர் தெரிவில் 326 பொதுச்சபை உறுப்பினர்கள் முன்னிலையில் தலைவர் தெரிவிற்கு சிறீதரனுடன் போட்டியிட்டார்? அப்போதே இந்த பொதுச்சபை பிழை என்று கூறி தடுத்திருக்கலாமே? தலைவர் தெரிவை தடுத்து நிறுத்தியிருக்கலாமே?

சரி இதெல்லாம் பரவாயில்லை, 2023 நவம்பர் 5ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற மத்தியகுழு கூட்டத்தில் ஒரு தொகுதி என்பது பிரதேச செயலாளர் பிரிவு அடிப்படையில் தெரிவு செய்வோம் என்ற தீர்மாணத்தை முன்மொழிந்ததே, தற்போதைய பதில் தலைவர் CVK சிவஞானமும், தற்போது பொதுச்சபை பிழை என கூறும் சுமந்திரனும் தான். தாம் முன்மொழிந்த தீர்மாணத்தை என்ன மாறாட்டத்தில் தற்போது பிழை என்று சுமந்திரன் வாதிடுகிறார்? இதைத்தான் சுத்துமாத்து என்று மக்கள் சொல்கிறார்களா?

தான் வெல்லுவன் என்ற மூடநம்பிக்கையில் இருந்த சுமந்திரன், தலைவர் தெரிவில் சிறீதரனிடம் தோற்ற பின் உச்சபட்ச மனஅழுத்தத்திற்கு உள்ளாகிவிட்டார். அதை குறைக்க தலைவர் தெரிவில் வென்ற சிறீதரனை பதவியேற்க விடாமல் சிற்றின்பம் கண்டார். இப்போது பாராளுமன்ற தேர்தலிலும் மக்கள் தோற்கடித்து விட்டதால் அந்த மனஅழுத்தத்தில் இருந்து மீள வழக்கை நீதிமன்றிலேயே வைத்திருந்து தனது அடிமை மத்தியகுழு மூலம் கட்சியை கட்டுப்படுத்தி சிற்றின்பம் கான்கிறார்.

இப்படியே தொடர்ந்தால் சுமந்திரன் உள்ளுராட்சி வட்டார தேர்தலில் நின்றாலும் அப்போதும் மக்கள் சுமந்திரனை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புவார்கள் என்பதே உண்மை நிலவரம்.

திருகோணமலையில் நடைபெறும் தலைவர் தெரிவு தொடர்பான வழக்கு சுமந்திரனே பின்புலம் எனபதற்கு இன்னோரு ஆதாரம் வெளியாகியிருக்கிறது. அதாவது இந்த வழக்கு தாக்கல் செய்வதற்கான பிராது(வழக்கு அறிக்கை) தயாரித்து கொடுத்த கொழும்பு வாழ் பிரபல சட்டத்தரணிக்கு குறித்த பிராது தயாரித்ததற்காக 10 இலட்சம் ரூபா பணம் சுமந்திரனால் தனக்கு தரப்பட்டது என தனது லண்டன் வாழ் நெருங்கிய நண்பருக்கு கூறியிருக்கிறார்.

இதுவரை இந்த வழக்கிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் காட்டி வந்த சுமந்திரன் நேற்றைய நீதிமன்ற அமர்வில் வழக்காளி சார்பாக வாதிட்டதின் மூலம் தான் தான் குறித்த வழக்கின் பின்புலம் என்பதை வெளிப்படையாக அம்பலப்படுத்தியிருக்கிறார்.

சிறப்புச் செய்திகள்