யாழ்ப்பாணத்தில் (Jaffna) உருவாகியுள்ள திடீர் செல்வந்தர்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் வன்முறைச் சம்பவங்களை ஒழுங்கமைத்தும், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டும், வட்டிக்குப்பணம் கொடுத்தும் சட்டத்துக்கு முரணான வகையில் சொத்துக்களை சேர்த்திருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள காவல்துறையினர், அவர்களில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில், மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளன.
Post Views: 462





