2025இல் வலுவிழக்கும் இலங்கை ரூபா!

இந்த ஆண்டு இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 2.2% குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் வாராந்திர பொருளாதார அறிக்கையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது இருப்பு பணம் அதிகரித்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புழக்கத்தில் உள்ள பணத்தின் அளவு அதிகரிப்பு மற்றும் மத்திய வங்கியில் வணிக வங்கிகள் வைத்திருக்கும் வைப்புத்தொகை அதிகரிப்பே இதற்கான காரணாமாக கூறப்படுகின்றது.

சிறப்புச் செய்திகள்