விரைவில் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனை இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
எனினும் ராஜாங்க அமைச்சர்களை கொண்டு எவ்வித பயன்களும் இல்லை என்று தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம், இன்னும் முன்னோக்கி செல்லக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே அனைத்துக்கட்சிகளையும் இணைந்து சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் போர்க்காலத்தில் ஒரு போத்தல் பெற்றோல் 2,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேநிலை இன்று கொழும்புக்கு ஏற்பட்டுள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் சாதாரண விலைக்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், கொழும்பில் 2,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த ஜூன் மாதத்தில் பணவீக்கம் 54.6 சதவீதமாக அமைந்திருந்தது.
இதனையடுத்து, பணவீக்கத்தில் சிம்பாப்வேவுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளதாக தயாசிறி தெரிவித்துள்ளார்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





