இலங்கை சுங்கத்துறை (Srilankan Customs) செப்டம்பர் மாதத்தில் அதன் அதிகபட்ச மாதாந்திர வருவாயைப் பதிவு செய்துள்ளது.
குறித்த தகவல் இலங்கை சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கத்துறை 2025 செப்டம்பரில் ரூ. 253.15 பில்லியனை வசூலித்துள்ளது.
சுங்கத் துறையின் கூற்றுப்படி, இது 2024 செப்டம்பர் உடன் ஒப்பிடும்போது 74.6% அதிகரிப்பைக் குறிக்கிறது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் சுங்க வருவாய் ரூ. 144.97 பில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Post Views: 186





