நாட்டின் நிதி நிலைமைகள் குறித்து மத்திய வங்கி ஆளுநர் உரை

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இடைக்கால வரவு செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் எதிர்வரும் 30ஆம் திகதி மாலை பாராளுமன்றத்தில் அனைத்து அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த உரை இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (24) முற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் எம்பிக்கள் கட்சித் தலைவர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலத்தை எதிர்வரும் 30ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்காக (வரவு செலவுத் திட்ட உரை) சமர்ப்பிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்